கட்டாய திருமணம்... துஸ்பிரயோகம்: 1500 சிறுவர்களுடன் தீவில் வாழும் மத வழிபாட்டு தலைவர்
பிலிப்பைன்ஸ் நாட்டில் தன்னை கடவுள் என கூறிக்கொள்ளும் நபரிடம் இருந்து 1,500 சிறார்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விசித்திர குழுவிடம் சிக்கிய 1,500 சிறார்கள்
பிலிப்பைன்ஸ் நாட்டவரான Jey Rence B Quilario என்பவர் உருவாக்கிய விசித்திர குழுவிடம் தற்போது 1,500 சிறார்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் Save The Children என்ற அமைப்பு அந்த சிறார்களை மீட்க களமிறங்கியுள்ளது.
@afp
அத்துடன் Quilario என்ற அந்த நபர் போதை மருந்து தயாரிக்கும் ஆலை ஒன்றையும் நடத்தி வருவதாக செனட்டர் ரொனால்ட் டெலா ரோசா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பல்வேறு தலைவர்கள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறார்களை மீட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
பலாத்காரம், பாலியல் வன்கொடுமை, சிறார் துஷ்பிரயோகம் உள்ளிட்ட கொடுமைகளை அரங்கேற்றும் ஒரு வழிபாட்டு முறை உண்மையில் சட்டத்திற்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ள செனட்டர் ஒருவர், சிறார்களுக்கு கட்டாயத் திருமணம் போன்ற கொடுமைகளை அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது முறையல்ல என்றார்.
Image: ViralPress
ஆயிரக்கணக்கான சிறார்களை பாலியல் அடிமையாக கொண்டுள்ள ஒரு குழு அது, அதன் தலைவர் மீது உடனடி நடவடிக்கை தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆபத்தான ஒரு நபரின் கைகளில் தற்போது சிறார்கள் சிக்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விசித்திரமான மத வழிபாட்டு குழு
பிலிப்பைன்ஸ் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த குழுவானது தொடக்கத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஒரு அமைப்பாகவே இயங்கி வந்துள்ளது. ஆனால் 2017ல் Omega de Salonera என பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன், விசித்திரமான மத வழிபாட்டு குழுவாகவும் மாறியது.
Image: ViralPress
மட்டுமின்றி, தங்கள் குழுவில் இணைந்து கொள்ளாதவர்கள் நிலநடுக்கத்தில் சிக்கி கொல்லப்படுவார்கள் எனவும் விளம்பரம் செய்தது. தற்போது முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அந்த குழு நிராகரித்துள்ளதுடன், சிறார்களை பாலியல் அடிமைகளாக பாதுகாத்து வருவது என்பது வெறும் கற்பனை எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த குழுவில் தற்போது 1,580 சிறார்கள் உட்பட 3,500 உறுப்பினர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |