அகீகா கொண்டாட்டத்திற்கு மத்தியில் இடிந்து விழுந்த இரட்டைக் கட்டிடங்கள்: 22 பேர் உயிரிழப்பு
மொராக்கோவில் இரட்டை கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இடிந்து விழுந்த இரட்டை கட்டிடங்கள்
மொராக்கோவின் ஃபெஸ்(Fez) நகரில் உள்ள இரட்டைக் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 22 பேர் உயிரிழந்ததுடன், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஃபெஸ் நகரின் அல்-முஸ்தக்பல் பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் 8 குடும்பங்கள் வரை வசித்து வந்த நிலையில் இந்த துயரமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

இடிந்து விழுந்த மற்றொரு கட்டிடம் அருகில் காலியாக இருந்த நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் ஆகும்.
குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த போது, அங்கு வசித்தவர்கள் குழந்தை பிறந்ததை குறிக்கும் இஸ்லானிய கொண்டாட்டமான அகீகா(Aqiqah)-வை கொண்டி கொண்டிருந்த போது இரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

துயர சம்பவத்திற்கு உள்ளூர் ஆதாரங்கள் தெரிவித்த தகவலில், கட்டிடம் இடிந்து விழுவதற்கு சில நாட்கள் முன்பே அதில் விரிசல் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதே சமயம் இந்த சம்பவம் தொடர்பாக பெஸ் நகர அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |