இங்கிலாந்தில் வீடொன்றின்முன் குவிந்த பொலிசார்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம்
நேற்று இங்கிலாந்திலுள்ள ஒரு வீட்டுக்குள் ஒருவர் வெடிபொருட்கள் வைத்திருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு உருவானது.
வீடொன்றின்முன் குவிந்த பொலிசார்
நேற்று செவ்வாய்க்கிழமை, மாலை 5.55 மணிக்கு, இங்கிலாந்தின் பிரிஸ்டலிலுள்ள வீடொன்றின் முன் பொலிசார் குவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியிலிருந்த 63 வீடுகளிலிருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டார்கள்.
அந்த வீட்டுக்குள் ஒருவர் வெடிபொருட்கள் வைத்திருப்பதாக தகவல் வெளியானதால் பெரும் பரபரப்பு உருவானது.
உடனடியாக அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் அந்த வீட்டில் சோதனை மேற்கொள்ள அப்பகுதியிலிருந்த 63 வீடுகளிலிருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டார்கள்.
7.10 மணியளவில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். அந்த வீட்டுக்குள் வெடிப்பொருட்கள் இருந்தனவா என்பது தொடர்பான விடயங்கள் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |