நடுங்க வைத்த சம்பவம்.... கொத்தாக பலியான அப்பாவி மக்கள்: வெளிவரும் பகீர் சம்பவம்
சூடான் தலைநகரில் நெரிசல் மிகுந்த சந்தையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அப்பட்டமான படுகொலை
மருத்துவ தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவிக்கையில், இது அப்பட்டமான படுகொலை, 60க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். உள்ளூர் தன்னார்வலர்கள் தெரிவிக்கையில், ஞாயிற்றுக்கிழமை தெற்கு கார்ட்டூமில் உள்ள குரோ சந்தையில் இராணுவ விமானம் குண்டுவீசித் தாக்கியது என குறிப்பிட்டுள்ளனர்.
@reuters
கடந்த ஏப்ரலில் இருந்து போட்டி இராணுவ பிரிவுகள் இப்பகுதியில் சண்டையிட்டு வருகின்றன. கார்ட்டூம் பகுதியானது கடந்த ஆறு மாதங்களாக போர்க்களமாக மாறியுள்ளது என மருத்துவ தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பஷெய்ர் மருத்துவமனையில் உள்ள தன்னார்வலர்களும் மருத்துவப் பணியாளர்களும் நகரத்தை சூழ்ந்துள்ள பயங்கரத்தின் அளவைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர் என்றே தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து வான் தாக்குதல்
குண்டுவெடிப்பால் உடல் உறுப்புகள் துண்டானவர்களின் உயிரைக் காப்பாற்ற முயற்சித்து வருகிறோம். அது அப்பட்டமான படுகொலை என தெரிவித்துள்ளனர். போர் தொடங்கிய பின்னர் சுமார் ஐந்து மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
@reuters
கார்ட்டூம் மற்றும் டார்பூரின் மேற்குப் பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சூடான் ராணுவம் தொடர்ந்து வான் தாக்குதலை முன்னெடுத்து வருவதுடன், பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்து வருகிறது.
சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு ராணுவம் முன்னெடுத்த வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் பிற நாடுகள் மோதலை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்தும், வெற்றி பெறவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, அப்பாவி மக்கள் சண்டையிலிருந்து தப்பிக்க பல போர்நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டன, ஆனால் அவை அனைத்தும் மீறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |