இந்தோனேசியாவில் கொத்துக்கொத்தாக கரையொதுங்கி இறந்த பைலட் திமிங்கலங்கள்!
இந்தோனேசியாவின் மதுரா தீவில் கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான பைலட் திமிங்கலங்களில் 46 திமிங்கலங்கள் உயிரிழந்த இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.
கரை ஒதுங்கிய திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் கொண்டு சென்று காப்பாற்ற முயற்சிக்கப்பட்டது.
ஆனால், கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்ட சில திமிங்கலங்கள் தனது தாயைத் தேடுக்கொண்டு மீண்டும் கரையொதுங்கியதாகக் கூறப்படுகிறது.
3 திமிங்கலங்கள் மட்டுமே உயிர் பிழைத்து கடலுக்கு அனுப்பட்டதாகவும், 46 திமிங்கலங்கள் கரையிலேயே இறந்துவிட்டதாகவும் East Java ஆளுநர் Khofifah Indar Parawansa கூறியுள்ளார்.
அங்குள்ள மக்களும், தன்னார்வலர்களும் திமிங்கலங்கள் மீது தண்ணீரை அள்ளி ஊற்றி காப்பாற்ற முயற்சித்துள்ளனர். அனால் முயற்சி பலனளிக்கவில்லை.
இறந்த திமிங்கலங்களை புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திமிங்கலங்கள் ஏன் தானாகவே கரையொதுங்கியது என்பது தெரியவில்லை.
ஆனால் அவை ஒரு தலைவனைப் பின்தொடரும் பழக்கத்தை கொண்டதாகவும், காயமடைந்த அல்லது துன்பகரமான திமிங்கலத்தைச் சுற்றி ஒன்றுகூடும் இயல்பான உணர்ச்சியை கொண்டவை என கூறப்படுகிறது.




