மின்னல் வேகத்தில் வந்த ட்ரோன்... பள்ளி மீது விழுந்த குண்டு: கதறித்துடித்த மாணவிகள்
மின்னல் வேகத்தில் நெருங்கி வந்த துருக்கியில் தயாரான அந்த ட்ரோன் விமானம் தீயள்ளி வீசியது
பாடசாலை மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்க கூட்டணி கடும் கண்டனம்
சிரியாவில் குர்து மாணவர்கள் மீது இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட ட்ரோன் தாக்குதலில் சிக்கி மாணவர்கள் பலர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதில் நான்கு மாணவிகள் கொல்லப்பட, உயிர் தப்பியவர்களில் மாணவிகள் இருவர் நடந்த கோர சம்பவத்தை அம்பலப்படுத்தியுள்ளனர். ரெண்டா பக்ர்(17), மற்றும் நோவின் எசாட்(18) என்பவர்களே ஆகஸ்ட் 18ம் திகதி நடந்த ட்ரோன் தாக்குதல் தொடர்பில் வெளியிட்டவர்கள்.
ட்ரோன் விமானம் நெருங்கிவரும் சத்தம் கேட்டதாக கூறும் அந்த மாணவிகள் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஆதரவுடன் செயல்படும் பள்ளி ஒன்றில் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தின் போது மின்னல் வேகத்தில் நெருங்கி வந்த துருக்கியில் தயாரான அந்த ட்ரோன் விமானம் தீயள்ளி வீசியது போன்ற உணர்வு ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.
தங்கள் நண்பர்கள் அனைவரும் ரத்த தெறிக்க, உடல்களில் தீக்காயங்களுடன், அம்மா என அலறியது தற்போதும் தங்கள் காதுகளில் முழங்குவதாக கூறியுள்ளனர். தங்களுக்கு லேசான காயங்களே ஏற்பட்டது என்பதால், எஞ்சியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உதவ முடிந்தது என்கின்றனர்.
குறித்த ட்ரோன் தாக்குதலில் நான்கு மாணவிகள் கொல்லப்பட்டதுடன், 11 பேர் காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். இதனிடையே, பாடசாலை மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்க கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், துருக்கியின் பெயரை குறிப்பிடாமல், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து கட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தயாராக இருப்பதாக துருக்கி ஜனாதிபதி எர்தோகன் அறிவித்த அடுத்த நாளே, வடகிழக்கு சிரியாவில் ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
@getty