சவுதி விமான நிலையத்தை உலுக்கிய சரமாரி டிரோன் தாக்குதல்!
சவுதி அரேபியாவில் உள்ள முக்கிய விமான நிலையத்தின் மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Asir மாகாணத்தின் தலைநகர் Abha நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீதே இந்த டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த டிரோன் தாக்குதலில் 8 பேர் காயமடைந்ததாகவும், பயணிகள் விமானம் சேதடைந்ததாக சவுதி அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் Abha சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்படும் 2 டிரோன் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடந்த தாக்குதலில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது வரை இந்த டிரோன் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
ஆனால், சவுதி அரேபியா மீதான டிரோன் தாக்குதலுக்கு ஹவுத்தி போராளிகள் குழு பலமுறை பொறுப்பேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.