புடினுடைய ஆடம்பர மாளிகை அருகே விழுந்து வெடித்த ட்ரோன்
புடினுக்கு சொந்தமான ஆடம்பர மாளிகை அருகே ட்ரோன் ஒன்று விழுந்து வெடித்ததில் நான்கு பேர் பலியாகியுள்ளார்கள்.
கருங்கடலை ஒட்டி அமைந்துள்ள, ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு சொந்தமான ஆடம்பர மாளிகை ஒன்றின் அருகே ட்ரோன் ஒன்று விழுந்து வெடிக்கும் காட்சிகள் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.
புடினுடைய மாளிகை அருகே விழுந்து வெடித்த ட்ரோன்
கருங்கடல் அருகே Krasnodar Krai என்னுமிடத்தில் புடினுக்கு சொந்தமானது என கூறப்படும் Gelendzhik lair என்னும் ஆடம்பர மாளிகை ஒன்று உள்ளது.

ஒரு பில்லியன் டொலர்கள் மதிப்புடைய அந்த மாளிகையின் அருகே வந்துகொண்டிருந்த ஒரு ட்ரோனை, ட்ரோன் எதிர்ப்பு கருவி ஒன்று சுட்டு வீழ்த்தியுள்ளது.

அந்த ட்ரோன் கடற்கரையில் சூரியக்குளியல் மேற்கொண்டிருந்த மக்கள் மீது விழுந்து வெடிக்க, ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பலியானதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ட்ரோன் புடினுடைய மாளிகையை குறிவைத்து அனுப்பப்பட்டதா, அதை யார் ஏவியது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
அதேபோல, இந்த சம்பவம் குறித்து உக்ரைனும் வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |