குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்: தயார் நிலையில் ராணுவம்
குவைத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எண்ணெய் நிலையம் மீது தாக்குதல்
வெள்ளிக்கிழமை குவைத்தின் அரசு எரிசக்தி நிறுவனமான குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு(KPC) சொந்தமான மினா அல்-அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.
இந்த ட்ரோன் தாக்குதலில் மினா அல்-அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பல பகுதிகளில் தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது.
அரசு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அரசு செய்தி நிறுவனமான KUNA உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த ட்ரோன் தாக்குதல் சம்பவத்தில் ஊழியர்கள் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ வேகமாக பரவியதை அடுத்து அதை அணைக்க சிறப்பு தீயணைப்பு படையினர் மற்றும் அவசர கால மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
தயார் நிலையில் குவைத் ராணுவம்
ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து, இன்று அதிகாலை முதல் குவைத் ராணுவம் முழு எச்சரிக்கையுடன் உள்ளது.
குவைத் வான் பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் அனைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |