தரைவழித் தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: ஈரானிய ராணுவத்திற்கு அவசர எச்சரிக்கை
அமெரிக்காவின் தரைப்படை தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஈரான் ராணுவம் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியில் நிலவும் பதற்றம்
ஈரான் மற்றும் அமெரிக்க படைகளுக்கு இடையிலான போர் நடவடிக்கை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிராந்தியத்தில் குழப்பமான கட்டத்தையும் எட்டியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், சில வாரங்களில் தீர்வு காணப்படலாம் என்றும் தெரிவித்து இருந்தார்.

ஆனால் அதற்கு மாறாக பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை மற்றும் போர் தளவாடங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருவது ஈரானுக்கு சந்தேகத்தை துண்டிவிட்டுள்ளது.
ஈரானில் மிகப்பெரிய தரைப்படை தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டு வருவதே அமெரிக்க படைகளின் குவிப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஈரான் ராணுவம் தயார் நிலை
இந்நிலையில் அமெரிக்கா எந்த நேரத்திலும் தரைவழி ஊடுருவலை நடத்தலாம் எனவே ஈரானிய இராணுவ படைகள் முழு செயல்பாட்டில் தயார் நிலையில் இருக்குமாறு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய தலைமை தளபதி அமீர் ஹதாமி, அமெரிக்காவின் எந்தவொரு ஆக்கிரமிப்பு முயற்சியையும் முறியடிக்க ஈரானிய ராணுவம் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக தரைவழி தாக்குதலை முன்னெடுத்தால் அது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் நடவடிக்கைகளை எதிர்மறையான எண்ணத்துடன் மட்டுமே கண்காணிக்க வேண்டும் என்றும் அமீர் ஹதாமி குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |