ரஷ்யாவில் கார் மீது விழுந்த உக்ரைன் ட்ரோன்! இருவர் உயிரிழந்த பரிதாபம்
ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் கார் ஒன்றின் மீது உக்ரேனிய ட்ரோன் விழுந்ததில் இருவர் கொல்லப்பட்டனர்.
91 உக்ரேனிய ட்ரோன்கள்
பெல்கோரோட், இணைக்கப்பட்ட கிரிமியா மற்றும் கருங்கடல் உட்பட எட்டு பிராந்தியங்களில் 91 உக்ரேனிய ட்ரோன்களை, அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஒரே இரவில் அழித்ததாக அல்லது இடைமறித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
இந்த நிலையில், பெல்கோரோட் பகுதியில் கார் ஒன்றின் மீது உக்ரேனிய ட்ரோன் தாக்கியுள்ளது.
இதில் காரில் இருந்த இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.
சுமி பிராந்தியத்தின் எல்லையில் நீண்டு செல்லும் சாலையில், கார் சென்றபோது தாக்குதலுக்கு உள்ளானதாக பெல்கோரோட் ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்தார்.
ஆளுநர் இரங்கல்
மேலும் அவர், "உக்ரேனிய ஆயுதப்படைகளின் மற்றொரு பயங்கரவாத தாக்குதலின் விளைவாக, இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்" என தெரிவித்துள்ளார்.
ட்ரோன் தாக்குதலில் தலை மற்றும் துண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |