கருங்கடலில் நடந்த ட்ரோன் தாக்குதலில் மூழ்கிய கப்பல்: பிரதமர் வெளியிட்ட தகவல்
Drones struck two merchant ships in black sea: பல்கேரியாவின் கடற்கரைக்கு அப்பால் நடந்த ட்ரோன் தாக்குதலில் இரண்டு கப்பல்கள் சேதமடைந்தன.
கருங்கடலில் நடந்த ட்ரோன் விமானத் தாக்குதலில் இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளதாக பல்கேரிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
கருங்கடலில் ட்ரோன் விமானத் தாக்குதல்
பல்கேரியாவின் கடற்கரைக்கு அப்பால் கருங்கடலில் ட்ரோன் விமானத் தாக்குதல் நடந்துள்ளது.

இதில் உக்ரேனியக் கப்பல் உட்பட இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு கப்பல் சிறிது நேரத்திலேயே மூழ்கியிருக்கிறது.
இதுகுறித்து பல்கேரிய பிரதமர் ரூமென் ரதேவ் வெளியிட்ட பதிவில், உக்ரைனுக்கு சொந்தமான கப்பல் ஒன்று மூன்று ட்ரோன் விமானங்களால் தாக்கப்பட்டது.
சிறிது நேரத்திலேயே மற்றொரு கப்பல் தாக்கப்பட்டு மூழ்கியது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறியுள்ளார்.
ஐந்து பணியாளர்கள் மீட்பு
இந்தத் தாக்குதல்கள் குறித்து ரஷ்யத் தூதரை வரவழைக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், கிராபெட்ஸ் கிராமத்தின் கடற்கரைக்கு அப்பால் மூழ்கிய கப்பலில் இருந்து ஐந்து பணியாளர்கள் மீட்கப்பட்டதாகவும், ஆனால் 11 பேர் இன்னும் காணாமல்போனதாக பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் பல்கேரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல்கேரிய ஊடகங்கள் அந்தக் கப்பலை அசோவ் கான்கார்ட் என்ற சரக்குக் கப்பல் என அடையாளம் காட்டின.
