இத்தாலியில் குகைக்குள் சிக்கிக்கொண்ட ஆராய்ச்சியாளர்: 26 மணி நேர மீட்பு போராட்டம்
இத்தாலியில் பாறை இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட நபர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
குகை ஆராய்ச்சியாளர் மீட்பு
இத்தாலியின் சார்டினியா தீவில் உள்ள குகை ஒன்றில் 32 அடி ஆழத்தில் பாறை இடிபாடுகளுக்கு இடையே 31 வயது குகை ஆராய்ச்சியாளர் சிக்கிக் கொண்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை லூகா ஓல்மெட்டோ(Luca Olmetto) என்ற மாணவர் கொரோபெட்டு(Gorropeddu) என்ற குகைக்குள் சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
Da ieri pomeriggio siamo al lavoro in Sardegna, nel territorio di Urzulei, per raggiungere e recuperare uno speleologo rimasto bloccato in una grotta a seguito di un crollo. Le operazioni di soccorso con i @vigilidelfuoco sono particolarmente complesse e proseguono senza sosta. https://t.co/dA4Wo3o60J
— Corpo Nazionale Soccorso Alpino e Speleologico (@cnsas_official) October 12, 2026
அப்போது வெளியேறும் வழியில் திடீரென பாறைகள் சரிந்து விழுந்து வழிகள் அடைக்கப்பட்டதை அடுத்து ஆபத்தில் சிக்கிக் கொண்டார்.
26 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு
பாறை சரிவு தொடர்பாக தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த குகை மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிகளை தொடங்கினர்.
சவாலாக இருந்த இந்த மீட்புப் பணியில் 100 க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் பங்கேற்றனர்.

இறுதியில் 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு திங்கட்கிழமை பிற்பகலில் ஆராய்ச்சியாளர் லூகா வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட ஆராய்ச்சியாளர் ஹெலிகாப்டர் உதவியுடன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.