100 கிலோ போதைப்பொருள் கடத்தல்! சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு மரண தண்டனை
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்
சிங்கப்பூர் நாட்டில் போதைப்பொருள் கடத்துவது என்பது மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.
இதில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வரை விதிக்கப்படுகிறது. இருப்பினும் அவ்வப்போது போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
போதைப்பொருள் கடத்திய 3 இந்தியர்கள்
சிங்கப்பூரில் வேலை செய்து வரும் இந்தியர்களான ராஜு முத்துக்குமரன் (38), செல்வதுரை தினகரன் (34), கோவிந்தசாமி விமல் கந்தன் (45) ஆகிய மூவரும் கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியாவுக்கு படகில் போதை பொருள் கடத்த முயன்றனர்.
அவர்கள் கரிமுன் என்ற பகுதிக்கு அருகே சென்றபோது காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து சுமார் 100 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3 இந்தியர்களுக்கு மரண தண்டனை
இதையடுத்து அவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அவர்கள் செய்த குற்றம் உறுதி செய்யப்பட்டது.
எனவே அவர்கள் மூவருக்கும் சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |