மகளுக்காக 2 மில்லியன் டொலரை தீயில் எரித்த நிழல் உலக தாதா: பாப்லோ எஸ்கோபாரின் இமாலய சொத்து மதிப்பு
தனக்கான தனிப்பட்ட சிறையை தானே கட்டிக்கொண்ட உலகின் மிகப்பெரிய பணக்கார கேங்ஸ்டர் பாப்லோ எஸ்கோபாரின் சொத்து மதிப்பு சுமார் 9 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
கோகோயின் ராஜா
இந்தியாவின் மிகவும் பணக்கார மற்றும் நிழல் உலக கேங்ஸ்டரான தாவூத் இப்ராஹிம்(Dawood Ibrahim) சொத்து மதிப்பு சுமார் 6.7 பில்லியன் அமெரிக்க டொலர் என்று 2015ம் ஆண்டு Forbes அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த தாவூத் இப்ராஹிம் உலகின் மிகப்பெரிய பணக்கார கேங்ஸ்டர் இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
கேங்ஸ்டர் உலகை சொத்துக்கள் மற்றும் நிகர மதிப்பால் ஆட்சி செய்த ஒரே நபர் என்றால் அது, கொலம்பியன் போதை பொருள் கடத்தல் மன்னர் பாப்லோ எஸ்கோபார்(Pablo Escobar) தான்.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து “கோகோயின் உலகின் ராஜாவாக”(King of Cocaine) மாறிய பாப்லோ எஸ்கோபாரின் வாழ்க்கை பயணம் ஒட்டுமொத்த உலகையும் வசீகரிக்கிறது.
பணக்கார கேங்ஸ்டர்
போதை பொருள் கடத்தல் மன்னனான பாப்லோ எஸ்கோபாரை உலகின் 7வது பணக்காரராக ஒருமுறை Forbes அறிவித்து இருந்தது. 1989ம் ஆண்டில் அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 9 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
உலகின் 80 சதவீத கோகோயின் சந்தைக்கு பொறுப்பான இவரது “மெடலின் கார்டெல்”(Medellín cartel) 1980களின் நடுப்பகுதியில் வாரத்திற்கு 420 மில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகத்தையும், ஆண்டுக்கு 22 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகத்தையும் நடத்தியது.
தன்னிடம் இருந்து அதிகப்படியான செல்வத்தை வைத்து ஏழை எளிய மக்களுக்கு பணத்தை வாரி வழங்கியது, வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கியது, சமூக கால்பந்து மைதானம் அமைத்தல் மற்றும் மிருகக்காட்சி சாலையை நிறுவுதல் போன்ற செயல்களை செய்ததால் அவர் ராபின் ஹூட் என்று புனைப் பெயரும் பெற்றார்.
சொந்தமாக சிறையை கட்டிக்கொண்ட பாப்லோ
எஸ்கோபார் உலகின் மிகப்பெரிய கேங்ஸ்டரான பாப்லோ எஸ்கோபார் தனக்கென சுயமாக வடிவமைத்துக் கொண்ட தனிப்பட்ட சிறைச்சாலையில் தன்னை அடைத்துக் கொள்வதற்காக கொலம்பியன் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது.
கால்பந்து மைதானத்துடன் கூடிய இந்த “லா கேட்ரல்” (La Catedral) ஆடம்பர சிறையில் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சக கைதிகள் அடைத்து சிறைச் சுவர்களில் காவலில் இருக்கும் காவலர்களையும் கட்டுப்படுத்தி தன்னுடைய போதைபொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தை பாப்லோ எஸ்கோபார் தொடர்ந்தார்.
பாப்லோ எஸ்கோபார் வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நாடக திரைப்பட பாணியில் நிகழ்ந்துள்ளது, அந்த வகையில் ஒரு முறை மலை மறைவிடத்தில் தாழ்வெப்பநிலை சிக்கிக் கொண்ட மகளின் உடல் வெப்ப நிலையை அதிகரிக்க சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் வங்கி பண நோட்டுகளை தீயில் போட்டு எரித்துள்ளார்.
Getty
Getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Pablo Escobar, King of Cocaine, Forbes, gangster, Dawood Ibrahim, drug lord, richest, money, businessman, seventh-richest man globally, Robin Hood, La Catedral, Medellín cartel,