போதையில் சொந்த காரை பறிகொடுத்துவிட்டு மெட்ரோ ஏறி சென்ற நபர்
குடிபோதையில் லிப்ட் கேட்டு வந்தவரிடம் சொந்த காரை பறிகொடுத்துவிட்டு, மெட்ரோவில் ஏறி வீட்டிற்கு சென்றுள்ளார் ஒரு குடிமகன்.
டெல்லியில் நடந்த வேடிக்கை சம்பவம்
இப்படியொரு வேடிக்கையான சம்பவம் டெல்லியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு நடந்துள்ளது.
வீட்டிற்கு சென்றபின், மறுநாள் போதை தெளிந்தபின் தான் யாரோ ஒருவரிடம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என தெரியவந்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
அடையாளம் தெரியாத நபருக்கு லிப்ட்
டெல்லியில் Greater Kailash-IIல் வசிக்கும் அமித் பிரகாஷ் எனும் 30 வயது இளைஞர் குருகிராமில் உள்ள கோல்ஃப் கோர்ஸ் சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைசெய்கிறார்.
இவர் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது யாரோ ஒரு அடையாளம் தெரியாத நபருக்கு லிப்ட் கொடுத்துள்ளார். பிரகாஷ் அந்த அந்நியருடன் சேர்ந்து அவரது காரில் மது அருந்தியுள்ளார்.
போதையில் காரை பறிகொடுத்தார்
பிரகாஷ் அளவில்லாமல் மது குடித்து, போதையில் இருந்த நிலையில், டெல்லி சுபாஷ் சௌக் பகுதியில் அந்த நபர் கேட்டுக்கொண்டார் என்பதற்காக காரை விட்டு இறங்கியுள்ளார். அவர் இறங்கிய மறுநொடி அவரை தனியாக விட்டுவிட்டு அந்த நபர் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
மறுநாள் ஹரியானா நகரில் உள்ள செக்டர் 65 காவல் நிலையத்திற்கு சென்றார் பிரகாஷ். அவர் அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 379 (திருட்டு) இன் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
கார் மட்டுமின்றி, அதிலிருந்த 18,000 ரூபாய் ரொக்கம், மொபைல் போன், மடிக்கணனி ஆகியவற்றையும் அந்த அடையாளம் தெரியாத நபரிடம் இழந்துள்ளார் பிரகாஷ்.
அவருக்கு நடந்தது ஒரு சோகம் என்றாலும், போதையில் ஒருவர் அடையாளம் தெரியாத ஒருவருடன் சேர்ந்து குடித்துவிட்டு, எல்லாவற்றையும் இழந்து நின்ற அவரது செயலை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்துவருகின்றனர். சிலர் இது எதோ திரைப்படத்தில் வரும் காட்சி போல இருப்பதாக கேலி செய்துள்ளார்.