பட்டப்பகலில் பெண் ஜனாதிபதியிடமே தவறாக நடந்துகொண்ட நபர்
பட்டப்பகலில் தன்னிடம் தவறாக நடந்துகொண்ட நபர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் மெக்சிகோ நாட்டின் ஜனாதிபதி.

பெண் ஜனாதிபதியிடமே தவறாக நடந்துகொண்ட நபர்
மெக்சிகோவின் ஜனாதிபதியான கிளாடியா ஷெயின்பாம் (Claudia Sheinbaum), நேற்று முன் தினம் ஜனாதிபதி மாளிகையிலிருந்து கல்வி அமைச்சகத்துக்குச் சென்றுகொண்டிருந்தார்.
தனது காரில் சென்றால் 20 நிமிடம் வரை ஆகலாம், ஆனால் நடந்து சென்றால் ஐந்து நிமிடம்தான் ஆகும் என்பதால் நடந்து செல்ல முடிவு செய்தார் கிளாடியா.

அப்போது அவரது ஆதரவாளர்கள் பலர் அவரை சூழ்ந்துகொள்ள, அவர்களில் ஒருவர் கிளாடியா தோளில் கைபோட்டதுடன், அவரை தவறாக தொட்டார்.
யாரோ தன்னை தவறாக தொடுவதை உணர்ந்த கிளாடியா அவரது கையை விலக்கிவிட, அந்த நபரோ கிளாடியாவை முத்தமிட முயன்றார்.
உடனே ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் அந்த நபரை அங்கிருந்து அழைத்துச் சென்றார்கள். பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த நபர் மீது முறைப்படி வழக்குத் தொடர கிளாடியா முடிவு செய்துள்ளார். தற்போது வழக்கும் தொடரப்பட்டுவிட்டது.
Presenté una denuncia por el episodio de acoso que viví ayer en la Ciudad de México. Debe quedar claro que, más allá de ser presidenta, esto es algo que viven muchas mujeres en el país y en el mundo; nadie puede vulnerar nuestro cuerpo y espacio personal.
— Claudia Sheinbaum Pardo (@Claudiashein) November 5, 2025
Revisaremos la… pic.twitter.com/jcs6FweI6q
ஒரு ஜனாதிபதிக்கே இந்த நாட்டில் இந்த நிலைமை என்றால், சாதாரண பெண்களின் நிலை என்ன என கேள்வி எழுப்பியுள்ள அவர், பெண்களை இப்படி அனுமதியின்றி தொடுவதை சட்டமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பில் மோசமான வரலாற்றைக் கொண்டுள்ள மெக்சிகோவில், நாளொன்றிற்கு சராசரியாக 10 பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள், பெண்கள் மீதான பாலியல் தாக்குதலும் அங்கு சாதாரணம்.
மெக்சிகோவில் வாழும் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களில் 70 சதவிகிதம் பேர் வாழ்வில் ஒருமுறையாவது பாலியல் துன்புறுத்தலை சந்திப்பதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |