திருமணத்தில் குடிபோதையில் இருந்த மணமகன்.., மணப்பெண்ணிற்கு பதில் நண்பனுக்கு மாலை அணிவித்ததால் பரபரப்பு
திருமணத்திற்கு குடிபோதையில் வந்த மணமகன், மணப்பெண்ணுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக தனது நண்பருக்கு அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிபோதையில் மணமகன்
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், கியோல்டியா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருமணத்தின் காணொளி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பிப்ரவரி 22-ம் திகதி அன்று நடைபெற்றது. இரு வீட்டாரும் ஏற்பாடு செய்த திருமணத்திற்கு மணமகள் சம்மதம் தெரிவித்து மணமேடைக்கு வந்தார்.
ஆனால், திருமணத்திற்கு வந்த மணமகன் குடிபோதையில் தள்ளாடி வந்துள்ளார். அப்போது, குடிபோதையில் இருந்த மணமகன் மணப்பெண்ணுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, பக்கத்தில் இருந்த அவரது நண்பருக்கு மாலை அணிவித்துள்ளார். இதனை பார்த்த மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர், அந்த இளைஞரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று மணமகள் உறுதியாக கூறினார். அப்போது, மணப்பெண்ணை மணமகன் வீட்டார் சமாதானப்படுத்த முயன்றும் அவர் சம்மதிக்கவில்லை.
அதோடு, நேரடியாக காவல்நிலையத்திற்கு சென்ற மணமகள் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் படி மணமகனின் குடும்பத்தினர் 5 பேர் மீது வரதட்சனை துன்புறுத்தல், பொது அவமானம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |