அடிக்கடி வறட்டு இருமலால் அவதிப்படுறீங்களா? எளிய பாட்டி வைத்தியம் இதோ
இருமலுக்கும், வறட்டு இருமலுக்கும் வித்தியாசம் உள்ளது. வறட்டு இருமலானது சளி அல்லது கோழை உற்பத்தியின் மூலம் ஏற்படுவதில்லை. இந்த வகை இருமல் மூக்கு அல்லது தொண்டையில் ஏற்பட்ட வைரஸ் நோய்த்தொற்றின் மூலம் உருவாவது. வறட்டு இருமல் தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போல் தொடர்ச்சியாக இருமல் வரும்.
வறட்டு இருமலை சரிசெய்வதற்கான சில எளிய இயற்கை மருத்துவம் குறித்து தெரிந்து கொள்வோம்.
ஒரு டேபிள் டீ ஸ்பூன் தேனை எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து காலை மாலை என இரு வேளைகளிலும் குடித்தால் வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும்.
1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் ஓமத்தை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, தேன் கலந்து தினமும் மூன்று முறை குடித்து வந்தால், வறட்டு இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
mdvip
இஞ்சியை தட்டி
சிறிதளவு இஞ்சியை எடுத்து தட்டி, அதனை வெதுவெதுபான நீரில் கலக்கி குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தொண்டைப் பகுதியில் ஏதேனும் கிருமி தொற்று இருந்தால்கூட வறட்டு இருமல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வீட்டில் இருக்கும் உப்பை எடுத்து தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்து வர வறட்டு இருமல் சரியாகும். கிருமி தொற்று இருந்தால்கூட குணமாகும்.
healthline
கற்பூரவள்ளி
கற்பூரவள்ளி இலையை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, நீரை வடிகட்டி குடித்து வந்தால், வறட்டு இருமல் வருவதைத் தடுக்க முடியும்.