துபாய் தீவிபத்தில் பலியான தமிழர்கள் யார்? புகைப்படங்களுடன் வெளியான அடையாளங்கள்
துபாய் டெய்ரா ஃப்ரிஜ் முரார் அல் ராஸ் பகுதியில் உள்ள பல மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.
தமிழர்கள், மலையாளிகள் 4 பேர் உயிரிழந்தனர்
உயிரிழந்த 16 பேரில், தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆண்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தம்பதி உள்ளடங்கிய 4 இந்தியர்களும் அடங்குவர். மேலும், பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் சூடானைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
இந்நிலையில், பலியான இந்தியர்களில், தமிழகத்தை சேர்ந்த அப்துல் காதர் (Imam Kasim Khader), குடு சாலியாகுண்ட் (Gudu Saliyakoondu,), கேரள மலப்புரம் வெங்கரையை சேர்ந்த ரிஜேஷ் கலங்காடன் (Rijesh Kalangadan), அவரது மனைவி ஜெஷி கண்டமங்கலத் (Jeshi Kandamangalath) என்பது அடையாளம் காணப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கேரள தம்பதி
மலப்புரத்தைச் சேர்ந்த வெங்கரா ரிஜேஷ் (வயது 38) மற்றும் அவரது மனைவி ஜெஷி (32) ஆகிய இருவருமே உயிரிழந்தனர்.
ஐந்து மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தின் நான்காவது தளத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்திற்கு, மின் கசிவே காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தீ விபத்தை தொடர்ந்து ஜன்னல் ஏசி வெடித்ததால் விபத்து மோசமாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
madhyamam
அடுத்த அறையில் இருந்த தீ, ரிஜேஷ் மற்றும் அவரது மனைவி வசித்த அறைக்கும் பரவியது. இதனால், மூச்சு திணறி இருவரும் இறந்ததாக கூறப்படுகிறது.
ரிஜேஷ் துபாயில் உள்ள டிரீம்லைன் டிராவல்ஸ் மற்றும் சுற்றுலா நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஜெஷி துபாய் கிசைஸில் உள்ள கிரசன்ட் பள்ளியில் ஆசிரியராக இருந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிஜேஷ் மற்றும் ஜெஷி தம்பதியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தமிழர்கள்
Gudu Saliyakoondu Photo: Gudu family
தமிழகத்தைச் சேர்ந்த காவலாளி குடு சாலியகோண்டு (48) கட்டிடத்திற்குள் சிக்கிய குடியிருப்பாளர்களைக் காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரோடு பணிபுரியும், அதே குடியிருப்பில் வசிக்கும் அவரது சகோதரர் சாலிங்க குடு உறுதி செய்தார்.
மேலும், தமிழகத்தைச் சேர்ந்த பெயிண்டர் இமாம் காசிம் காதர் (42) என்பவரும் தீயில் உயிரிழந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலியான 4 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.