25 ஆண்டுகளுக்கு மாதம் 5.5 லட்சம் பரிசு: லொட்டரியில் இந்தியருக்கு அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்
இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5.5 லட்சம் கிடைக்கும் பிரம்மாண்ட லொட்டரி பரிசு கிடைத்துள்ளது.
லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்
இந்தியாவின் உத்தரப் பிரதேசம் லக்னோ பகுதியை சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் முகமது அடில் கான், கடந்த 2018ம் ஆண்டு சவுதி அரேபியாவில் இருந்து துபாய் சென்றுள்ளார்.
அப்போது சமூக வலைதளங்களை ஸ்க்ரோல் செய்து பார்த்துக் கொண்டு இருந்த முகமது அடில் கான் தற்செயலாக லொட்டரி சீட்டு விளம்பரத்தை பார்த்துள்ளார்.
இதையடுத்து லொட்டரி சீட்டை வாங்க முடிவு எடுத்து அதன்படி லொட்டரி சீட்டையும் முகமது அடில் கான் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் தன்னுடைய லொட்டரி சீட்டின் மூலம் ஃபாஸ்ட்5 என்ற பரிசை வென்றுள்ளார். இந்த பரிசு மூலம் அவருக்கு 25 ஆண்டுகளுக்கு மாதம் ஏஇடி 25,000(இந்திய ரூபாய் மதிப்பில் 5.5 லட்சம்) பெற இருக்கிறார்.
கனவு நிறைவேறியது
லொட்டரி வெற்றி குறித்து பேசிய முகமது அடில் கான், இந்த லாட்டரி டிக்கெட் என்னை ஃபாஸ்ட்5 வெற்றியாளராக மாற்றும் என்று சிறிதும் நினைக்கவில்லை, ஒவ்வொரு மாதமும் ஏஇடி 25,000-ஐ எனது வங்கிக் கணக்கில் பெறுவது என்பதை நம்ப கூட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி மூலம் எனது குடும்பத்தை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வாழ அழைத்து வரும் கனவு நிறைவேற இருப்பதாகவும், அவர்களுக்காக விரைவில் வீடு ஒன்று வாங்க வேண்டும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இது போன்ற சிறப்பான லொட்டரி பரிசை வேறு எந்த நிறுவனமும் வழங்குவதை நான் பார்க்கவில்லை, இது எனக்கு நல்ல முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |