துபாயின் 5 முக்கிய சுற்றுலா தளங்கள்: கொட்டிக் கிடக்கும் ஆடம்பரமும், அற்புதமும்!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு பிரகாசிக்கும் நகரங்களில் ஒன்று துபாய் ஆகும்.
துயாய் நகரம் ஆடம்பரமான வாழ்க்கை முறை, அற்புதமான கட்டிடக்கலை மற்றும் ஆடம்பரமான வசதிகளுக்கு பெயர் பெற்றதாக திகழ்கிறது.
அதுமட்டுமின்றி துபாய் நகரம் சாகச ஆர்வலர்கள் முதல் கலாச்சார ஆர்வலர்கள் வரை அனைவருக்கும் தீனி போடும் நகரமாக விளங்குகிறது.
இவ்வாறு பல அதிசயங்கள் நிறைந்துள்ள துபாய் நகரின் முக்கிய 5 சுற்றுலா தலங்கள் குறித்து பார்ப்போம்.
புர்ஜ் கலீபா(Burj Khalifa)
துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலீபா உலகின் மிக உயரமான கட்டிடமாக திகழ்கிறது.
828 மீட்டர் உயரத்தில் நிற்கும் புர்ஜ் கலீஃபாவில் மொத்த 160 தளங்கள் உள்ளன, 124வது மற்றும். 125 வது தளம் நகரின் அற்புதமான வானளாவிய காட்சிகளை வழங்கும் பார்வையிடல் தளமாக அமைக்கப்பட்டுள்ளது.
148வது தளத்தில் அமைந்துள்ள சிறந்த சொகுசு lounge-யில் குளிர்ச்சியான வான் அழகுடன் நீங்கள் ஓய்வு எடுக்கவும், சிறந்த இரவு உணவையும் உட்கொள்ள முடியும்.
பாம் ஜுமேரா(Palm Jumeirah)
பனை மரத்தின் வடிவத்தில் செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட இந்த தீவு கூட்டங்கள் துபாயின் அடையாளமாக உள்ளது.
இது ஆடம்பரமான ஹோட்டல்கள், உயர்நிலை குடியிருப்புகள் மற்றும் தூய்மையான கடற்கரைகளுக்கு தாயகமாகும்.
உங்களால் பாம் ஜுமேரா மோனோரயிலில் பயணித்து தீவின் ஒட்டுமொத்த அழகான காட்சிகளை ரசிக்கவும்.
இங்குள்ள செழுமையான ரிசார்ட்கள் மிக அற்புதமான தண்ணீர் பூங்காக்கள், நீருக்கடியில் அமைந்து பூங்கா, மீன்வளம் ஆகியவற்றிக்காக அறியப்படுகிறது.
துபாய் மால்(Dubai Mall)
துபாயில் அமைந்துள்ள வணிக வளாகம் உலகின் மிகப்பெரிய வணிக வளாகமாகும், இங்குள்ள பரந்த அளவிலான கடைகள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு விருப்பங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
இங்குள்ள நீருக்கடியில் உள்ள விலங்கியல் பூங்கா ல்வேறு கடல் வாழ்வுகளை கொண்ட இந்த அற்புதமான வாழ்வியல் காட்சி அனுபவத்தை தருகிறது.
மேலும் ஒலிம்பிக் அளவிலான பனிச்சறுக்கு அரங்கத்தில் நாம் வேடிக்கையான அனுபவத்தை பெறலாம்.
ஜுமேரா கடற்கரை(Jumeirah Beach)
ஜுமேரா கடற்கரையின் பழமையான தங்க கடற்கரை மணலில் இதமான சூரிய ஒளியை அனுபவிக்க முடியும்.
மேலும் ஜுமேரா கடற்கரையில் நீச்சல், ஸ்நோர்கெலிங் மற்றும் ஜெட் ஸ்கீயிங் போன்ற பல்வேறு நீர் விளையாட்டுகளையும் அனுபவிக்க முடியும்.
அத்துடன் அரேபிய வளைகுடாவில் அமர்ந்து உங்களால் இனிமையான சூரிய அஸ்தமனங்களை ரசிக்க முடியும்.
துபாய் மிராக்கிள் கார்டன்(Dubai Miracle Garden)
மில்லியன் கணக்கான பூக்களை கொண்ட துபாய் மிராக்கிள் கார்டனில் அற்புதமான பூக்கள் காட்சிகளை வியந்து பார்க்கலாம்.
இதய தோட்டம், புன்னகை முகம் தோட்டம் மற்றும் பட்டாம்பூச்சி தோட்டம் போன்ற தீம் பூங்காக்களையும் உங்களால் இங்கு பார்வையிட முடியும்.
இங்கு பூக்களால் முற்றிலும் செய்யப்பட்ட பிரமாண்டமான டெடி கரடியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |