2026 ஆம் ஆண்டில் தனியாக பயணம் செய்ய சிறந்த நகரங்கள் - முதலிடத்தில் எந்த நகரம்?
2026 ஆம் ஆண்டில் தனியாக பயணம் செய்ய சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
தனியாக பயணம் செய்ய சிறந்த நகரங்கள்
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா பயணங்கள் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது வேலைப்பளு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழுவாக பயணம் செய்வது குறைந்து வருகிறது.

அதேவேளையில், தனியாக பயணங்கள் மேற்கொள்ளும் Solo Travellers எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குழு பயணத்தில் ஓவ்வொருவருக்கும் ஒரு இடம் விருப்பமாக இருக்கும். ஆனால் தனியாக பயணம் செய்யும் போது பயணம் செய்யும் இடம் உள்ளிட்ட அனைத்தையும் தேர்வு செய்யும் சுதந்திரம் இருக்கும்.
இந்த சூழலில், தனியாக பயணம் செய்பவர்களுக்கு சிறந்த உலக நகரங்களின் பட்டியலை Trip advisors நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உணவு, பொதுப் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த சூழ்நிலை தொடர்பான பயணிகளின் அனுபவங்களை அடிப்படையாக வைத்து இந்த தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
டப்ளின்
இந்த பட்டியலில், அயர்லாந்தில் உள்ள டப்ளின் முதலிடம் பிடித்துள்ளது.

Credit : Getyourguide.com
டப்ளினின் பிரபல இடங்கள் அனைத்தும் நடந்து செல்லும் தூரத்திலே அமைந்துள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் பொதுப்போக்குவரத்தும் இணைக்கப்பட்டுள்ளது.

டப்ளின் மக்கள் எளிதாக பரிச்சயமற்றவர்களுடன் கூட உரையாடல்களை மேற்கொள்வார்கள். மேலும், ஆங்கிலம் அனைவராலும் பேசப்படுவதால் மொழித்தடை இல்லை.
பன்றி இறைச்சி, மாட்டு இறைச்சி தொடங்கி மதுவகைகள் என சிறந்த உணவு கலாச்சாரத்தை உடையது.

2வது இடத்தில் ஜேர்மனி தலைநகர் பெர்லின், 3வது இடத்தில் பிரித்தானிய தலைநகர் லண்டன், 4வது இடத்தில், சிலி நாட்டின் சாண்டியாகோ, 5வது இடத்தில் பிரித்தானியாவின் எடின்பர்க் ஆகியவை அமைந்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் 6வது இடத்திலும், வியட்நாமின் ஹனோய் 7வது இடத்திலும், ஸ்பெயினின் மாட்ரிட் 8வது இடத்திலும், இந்தோனேசியாவின் பாலி 9வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் 10 வது இடத்திலும், 13வது இடத்தில் துபாயும், 19வது இடத்தில் சிட்னியும் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |