லண்டனில் இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து! 32 வயது இளம்பெண் பரிதாப பலி
லண்டனில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 32 வயது இளம்பெண் சிக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இக்கொடூர சம்பவம் கடந்த செவ்வாய் கிழமை காலை 8.25 மணியளவில் நடந்துள்ளது. லண்டன் நகரத்தை சேர்ந்தவர் மெலிசா(32). இவர் லண்டன் நகரத்தில் உள்ள விக்டோரியா நிலையத்திற்கு சாலையோரம் நடந்து கொண்டு சென்றிருந்தார்.
அப்பொழுது அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் எதிர்பாராதவிதமாக எதிரே இருந்த பேருந்து மேல் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் மெலிசா சிக்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மற்றும் 2 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர். குடும்பத்தினர் மெலிசா இறப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கூறியது, மெலிசா ஒரு விசித்திரமான அழகான பெண். அவளின் உயிரிழப்பு எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் இயற்கையால் நடப்பதை யாரும் தடுக்க முடியாது என்று கூறினர்.
இறந்த
தந்தையின் பக்கத்தில் அவளையும் ஓய்வெடுக்க அனுப்புகிறோம் என்று உணர்ச்சி பொங்க கூறினார்கள்.