தனது பாணியில் தவெக தலைவர் விஜயை விமர்சித்த அமைச்சர் துரைமுருகன்
நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டதற்கு விஜய் விமர்சனம் செய்த நிலையில் அதற்கு அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
துரைமுருகன் விமர்சனம்
தமிழக முதல்வரின் டெல்லி பயணத்தால் திமுக, பாஜக இடையேயான மறைமுக கூட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அவர் அந்த அறிக்கையில், "ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும்போது உடனடியாக அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டால், அவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போல அனைத்தும் மறைக்கப்படும் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைச்சர்கள் பலரை தொடர்ந்து தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் அமைந்துள்ளது.
திமுக, பாஜக இடையேயான மறைமுக கூட்டும், பேர அரசியலும் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதையே இது காட்டுகிறது.
இந்த அவலமான திமுக அரசின் ஊழல் பெருச்சாளிகள் தமிழக மக்களால் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தப்பட்டு, மக்கள் ஆதரவோடு தவெக உண்மையான மக்களாட்சியை அமைக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ராணிப்பேட்டையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன், திமுகவை விமர்சித்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை விமர்சித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், "பச்சா இன் பாலிடிக்ஸ்" என்று அவரது பாணியில் பதில் அளித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |