வான்பரப்பில் அத்துமீறிய ரஷ்யா...இடைமறித்த டச்சு F-35 போர் விமானங்கள்: நெதர்லாந்து அறிக்கை
போலந்துக்கு அருகே அத்துமீறி நுழைந்த மூன்று ரஷ்ய இராணுவ விமானங்களை டச்சு F-35 ரக போர் விமானங்கள் இடைமறித்தாக நெதர்லாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துமீறிய ரஷ்ய விமானங்கள்
நெதர்லாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் திங்கட்கிழமை பிற்பகுதியில் வெளியிட்ட அறிக்கையில், போலந்துக்கு அருகே அத்துமீறி நுழைந்த மூன்று ரஷ்ய இராணுவ விமானங்களை இரண்டு டச்சு F-35 போர் விமானங்கள் இடைமறித்து அவர்களை வெளியே அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துமீறி நுழைந்த ரஷ்ய விமானங்கள் கலினின்கிராட்டில் இருந்து போலந்து நேட்டோ பொறுப்பான பகுதியை நெருங்கியது என்று அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reuters
கலினின்கிராட் என்பது நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களான போலந்து மற்றும் லிதுவேனியா இடையே அமைந்துள்ள ஒரு ரஷ்ய பால்டிக் கடற்கரை பகுதி ஆகும்.
போர் விமானங்கள்
போலந்துக்கு அருகே பறந்த ரஷ்யாவின் மூன்று விமானங்கள் அடையாளம் காணப்பட்டது, அதில் ரஷ்ய IL-20M Coot-A இரண்டு Su-27 ஃபிளாங்கர்களால் அழைத்துச் செல்லப்பட்டது.
இதனை டச்சு F-35 போர் விமானங்கள் இடைமறித்து நோட்டோ பங்காளிகளிடம் எஸ்கார்ட்டை ஒப்படைத்தன.
ரஷ்ய இராணுவ விமானங்கள் இடைமறித்தது தொடர்பாக எழுப்பபட்ட கோரிக்கைக்கு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.