சனிக்கிழமை வாழ்வின் கடைசி நாள்... ஐரோப்பிய பெண் ஒருவரின் குறிப்பு: பின்னர் வெளியான துயரம்
நெதர்லாந்து பெண் ஒருவர் தாம் அனுபவித்துவந்த நாள்பட்ட நோய் தொடர்பில், சமூக ஊடகத்தில் தவறாமல் பதிவு செய்து வந்த நிலையில், ஜனவரி 27ம் திகதி கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாழ்வின் கடைசி நாள்
நெதர்லாந்தை சேர்ந்த 28 வயது Lauren Hoeve என்பவரே, ஜனவரி 27ம் திகதி கருணைக்கொலை செய்யப்பட்டவர். CFS எனப்படும் நாள்பட்ட ஒருவகை சோர்வு நோயுடன் லாரன் ஹோவ் போராடி வந்துள்ளார்.
Credit: @dutchlauren
தமது நோய் மற்றும் அன்றாட வாழ்க்கை தொடர்பில் அவர் சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்தும் வந்துள்ளார். இந்த நிலையில் ஜனவரி 24ம் திகதி அவர் பதிவு செய்துள்ள குறிப்பில், வாழ்வின் கடைசி நாள் எதிர்வரும் சனிக்கிழமை என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் ஒரு கேலிச் சித்திரமும் பதிவேற்றியுள்ளார். அவர் தனது பதிவில், தனது நோயின் போது, குறிப்பாக தனது கருணைக்கொலை விருப்பத்தை அறிவிப்பதற்கு முந்தைய காலத்தில் தன்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
மட்டுமின்றி, அதுவரை தமது சமூக ஊடக பக்கத்தில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளதுடன், சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி 1.30 முதல் 2.30 வரையான நேரத்தில் தாம் கருணைக்கொலை செய்யப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Credit: @dutchlauren
உங்கள் அனைவரையும் மிக நெருக்கமாக அறிந்திருக்கவில்லை என்றாலும், நான் தனியாக இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தியவர்கள் நீங்கள் என லாரன் ஹோவ் குறிப்பிட்டுள்ளார்.
நாள்பட்ட ஒருவகை சோர்வு நோய்
எனது வாழ்வின் கடைசி மணி நேரத்தை உங்களுடன் பகிந்துகொள்ள விரும்பியதன் காரணம், எனக்காக நீங்கள் விரும்பினால் ஒரு மெழுகுவர்த்தி ஏத்துங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ல் இருந்தே கருணைக்கொலை தொடர்பான தகவல்களை அவர் தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்து வந்துள்ளார். 2019ல் CFS எனப்படும் நாள்பட்ட ஒருவகை சோர்வு நோய் அவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Credit: @dutchlauren
முதல் முதலில் கருணக்கொலை தொடர்பில் தமது மருத்துவரிடம் லாரன் ஹோவ் வெளிப்படுத்திய்போது, அவளது விருப்பத்திற்கு மதிப்பளிப்பதாகக் கூறிய அந்த மருத்துவர், ஆனால் அவளது உளவியல் நிலைமைகள் காரணமாக அவளது நோயும் சிக்கலானதாக இருந்ததால் அதை அவரால் செய்ய முடியாது என மறுத்துள்ளார்.
ஆனால் காத்திருப்போர் பட்டியலில் அவர் பெயர் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளில் பரவ, லாரனின் காத்திருப்பும் ஆண்டுகளாக நீண்டது.
பொதுவாக தமது அன்றாட நிலைமைகள் தொடர்பில் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வந்துள்ளார் லாரன். பொதுமக்கள் பலரும் அவருக்கு ஆறுதல் செய்தியும் பதிவு செய்து வந்துள்ளனர்.
வெளியான தரவுகளின் அடிப்படையில், ஜனவரி 27ம் திகதி உள்ளூர் நேரப்படி பகல் சுமார் 1.55 மணிக்கு லாரன் மிக அமைதியாக மரணத்தை ஏற்றுக்கொண்டார் என்றே கூறப்படுகிறது. அவரது பெற்றோரும் நெருங்கிய நண்பர் ஒருவரும் அப்போது உடனிருந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |