தாலிபான்கள் கட்டுபாட்டுக்குள் வந்த ஆப்கானிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி! சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்
தாலிபான்கள் கட்டுபாட்டுக்குள் வந்த ஆப்கானிஸ்தானில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவலை நில அதிர்வுக்கான தேசிய மையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்பட நாடு முழுவதுமே தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து உள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர்.
குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் நாட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர் என்பதும் இதனால் விமான நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Earthquake of Magnitude:4.5, Occurred on 17-08-2021, 06:08:38 IST, Lat: 36.65 & Long: 71.30, Depth: 230 Km ,Location: 83km SE of Fayzabad, Afghanistan for more information download the BhooKamp App https://t.co/L99HrsAFP7@ndmaindia @Indiametdept pic.twitter.com/IpvUqlN9mx
— National Center for Seismology (@NCS_Earthquake) August 17, 2021
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து பெரும் அச்சத்தில் உள்ள மக்களுக்கு மேலும் ஒரு சோதனையாக இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 6.08 மணிக்கு ஆப்கானிஸ்தானில் ஃபேசாபாத்திலிருந்து தென்கிழக்கு 83 கி.மீ. தூரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது.
இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். முதல் கட்டமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிகிறது.