சென்னை அருகே நிலநடுக்கம்! 3.9 ரிக்டர் அளவில் பதிவு: முழு தகவல்
சென்னை அருகே ரிக்டர் 3.9 அளவிலான லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சென்னை அருகே நிலநடுக்கம்
சென்னை அருகே ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவான இந்த லேசான நிலநடுக்கம் திருப்பதியில் இருந்து கிழக்கு, வடகிழக்கு திசையில் 58 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இரவு 8.43 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சென்னை, திருவள்ளூர், மற்றும் தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப் பகுதியான கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதியில் உணரப்பட்டது.
Earthquake of Magnitude:3.9, Occurred on 14-03-2024, 20:43:05 IST, Lat: 13.84 & Long: 79.91, Depth: 10 Km ,Location: 58km ENE of Tirupati, Andhra Pradesh, India for more information Download the BhooKamp App https://t.co/eMEMA3rSLo@KirenRijiju @Dr_Mishra1966 @ndmaindia… pic.twitter.com/fNAZHyzNrU
— National Center for Seismology (@NCS_Earthquake) March 14, 2024
நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். இதுவரை நிலநடுக்கத்தால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
நிலநடுக்கம் ஏற்பட்டால் செய்ய வேண்டியவை
நிலநடுக்கம் ஏற்படும் போது, பதட்டமடையாமல் அமைதியாக இருக்க வேண்டும்.உறுதியான கட்டிடங்களுக்குள் சென்று பதுங்குவது பாதுகாப்பானது.
திறந்தவெளியில் இருந்தால், மரங்கள், கட்டிடங்கள், மின் கம்பிகள் போன்றவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
நிலநடுக்கம் முடிந்த பின்னர், கட்டிடங்கள், வீடுகளில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்து, பாதுகாப்பற்ற நிலையில் இருந்தால் அதில் இருந்து வெளியேற வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Chennai Earthquake, Light tremors felt near Chennai, India, Earthquake in Chennai today, Chennai tremors, India Earthquake today