அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த போது அடுத்தடுத்து நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்
இந்திய மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் மணிப்பூரில் இன்று காலையில் இருந்தே அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மணிப்பூரில் நிலநடுக்கம்
மணிப்பூரில் உள்ள உக்ருலில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதிகாலையில் தாக்கியதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.
இந்த நிலநடுக்கம் அதிகாலை 5.01 மணியளவில் ஏற்பட்டுள்ளது என்றும், 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.
ராஜஸ்தானில் நிலநடுக்கம்
முன்னதாக, ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் அரை மணி நேரத்தில் மூன்று நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதிகாலை 4.25 மணியளவில் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதனிடையே , 4.4 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் 4.09 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்ட நிலையில், இரண்டாவது நிலநடுக்கம் 3.1 ரிக்டர் அளவில் 4.22 மணிக்கு 5 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டது.
ராஜஸ்தான் மற்றும் மணிப்பூரில் தொடர்ந்து நடந்த இந்த நிலநடுக்கத்தினால் அங்குள்ள மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |