லடாக்கில் நிலநடுக்கம்... கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறல்.!
இன்று காலை 10.30 மணிக்கு லடாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
லடாக்கில் நிலநடுக்கம்
லடாக்கின் லே பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டராக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் லே, லடாக்கிலிருந்து 166 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது.
இன்று காலை 10.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டபோது, வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தனர். எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
துருக்கி-சிரியா நிலநடுக்கம்
கடந்த பிப்ரவரி 6-ம் திகதி திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திலிருந்து உலக நடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Earthquake of Magnitude: 4.3, Occurred on 28-03-2023, 10:47:02 IST, Lat: 35.64 & Long: 77.80, Depth: 105 Km ,Location: 166km N of Leh, Laddakh, India for more information Download the BhooKamp App https://t.co/ceMTNIn6gd@Dr_Mishra1966 @Ravi_MoES @ndmaindia @Indiametdept pic.twitter.com/p4ByGzigaD
— National Center for Seismology (@NCS_Earthquake) March 28, 2023