நாட்டை உலுக்கிய பாரிய நிலநடுக்கம்..அவசர சுனாமி அச்சுறுத்தல் விடுப்பு
Urgent tsunami threat issued for panama: பனாமாவை பாரிய நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து, அவசர சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான பனாமாவை 7.7 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் உலுக்கியது.
பாரிய நிலநடுக்கம்
பனாமாவில் 100க்கும் சற்று அதிகமான குடியிருப்பாளர்களைக் கொண்ட ஒரு சிறிய கிராமமான பிட்டலோசா அரிபாவின் தென்மேற்கில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது.
ஆனால், இது தலைநகரமான பனாமா சிட்டியிலும், அண்டை நாடான கோஸ்டாரிகாவின் தலைநகரிலும் உணரப்பட்டது.
இதனையடுத்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அவசர சுனாமி அச்சுறுத்தல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு ஒன்றில் பனாமா, கொலம்பியா, கோஸ்டாரிகா, ஈக்வடார், பெரு, நிகரகுவா, குவாத்தமாலா, எல் சால்வடார் மற்றும் மெக்சிகோ ஆகிய 9 நாடுகளின் சில பகுதிகளில் அபாயகரமான அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அச்சுறுத்தலுக்கு உள்ளான கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தேசிய மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அபாயம் நீடிக்கலாம்
ஹோனோலுலுவில் உள்ள தேசிய வானிலை சேவை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தனது எச்சரிக்கையில், 'சுனாமி என்பது தொடர்ச்சியான அலைகளின் தொகுப்பாகும். அலைகளின் உச்சிகளுக்கு இடையிலான நேரம் ஐந்து நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை மாறுபடலாம். ஆரம்ப அலைகளுக்குப் பிறகு பல மணிநேரம் அல்லது அதற்கும் மேலாக இந்த அபாயம் நீடிக்கலாம்' என தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள பகுதிகளில் ஏற்படக்கூடிய சேதங்கள் குறித்து விசாரித்து வருவதாக பனாமாவின் குடிமைப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
