பயங்கர நிலநடுக்கத்திற்கு 296 பேர் பலி! மேலும் உயரலாம் என அச்சம்
மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 296 பேர் பலியானது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொராக்கோ தலைநகர் ரபாத் முதல் மாரகெச் வரை நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Twitter
இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்களுக்கு சிக்கிய பலர் பலியானதாக தெரிய வந்துள்ளது.
Reuters
இதுவரை இடிபாடுகளுக்குள் சிக்கி 296 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 153 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த மற்றும் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணி துரிதகதியில் நடந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
நிலநடுக்க அச்சத்தினால் ஆண்கள், பெண்கள் என பலரும் தங்கள் குழந்தைகளுடன் வீடுகளுக்குள் செல்லாமல் வீதிகளில் தங்கியுள்ளனர்.
AP
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |