இந்த நாடுகளின் பரிதாப நிலைக்கு இது தான் காரணம்: விஞ்ஞானிகள் வெளிப்படை
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளின் பேரழிவு வறட்சிக்கு புவி வெப்பமடைதல் தான் காரணம் என விஞ்ஞானிகள் நம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம்பிக்கை இழந்த குடும்பங்கள்
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளை பஞ்சம் வாட்டி வதைக்கிறது. இப்பகுதி முற்றிலும் தண்ணீரின்றி காணப்படுகிறது. நம்பிக்கை இழந்த குடும்பங்கள் தண்ணீருக்காக வறண்ட ஆற்றுப் படுகைகளில் பல மீற்றர்கள் தோண்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
@getty
மேலும் 40 ஆண்டுகளில் இல்லாத வறச்சி நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்களை தற்போது மனிதாபிமான உதவி கோரும் நிலைக்கு தள்ளியுள்ளது. இந்த நிலையில், 7 நாடுகளை சேர்ந்த 19 ஆய்வாளர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவின் சூழ்நிலையை ஆய்வு செய்ததில் புவி வெப்பமடைதல் தான் காரணம் என கண்டறிந்துள்ளனர்.
மட்டுமின்றி, பருவநிலை மாற்றம் விவசாய வறட்சியை நூறு மடங்கு அதிகமாக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அதிக வெப்பநிலை, மோதல்கள், பலவீனமான அரசாங்கம் மற்றும் வறுமை ஆகியவையும் காரணம் என்று விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டனர்.
பெண்களுக்கு கூடுதல் ஆபத்து
கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
Image: Adam Gerrard
மட்டுமின்றி, சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் ஆயிரக்கணக்கான திருமணமான அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கூடுதல் ஆபத்து உள்ளது எனவும் ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.