எபோலா பீதி... பயணி ஒருவரால் கனடாவுக்கு திருப்பி விடப்பட்ட பிரான்ஸ் விமானம்
பயணி ஒருவருக்கு எபோலா பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தில் பிரான்ஸ் விமானம் ஒன்று கனடாவுக்கு திருப்பி விடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
நுழைவுக் கட்டுப்பாடுகள்
ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று பாரிஸ் நகரில் இருந்து அமெரிக்காவின் டெட்ராய்ட் நகருக்கு புறப்பட்டுள்ளது. ஆனால் நடு வழியிலேயே அந்த விமானமானது கனடாவுக்கு திருப்பி விடப்பட்டது.

வெளியான தகவலின் அடிப்படையில், பயணி ஒருவர் தவறுதலாக விமானத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் சமீபத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவிற்குப் பயணம் செய்துள்ளது பின்னர் தெரிய வந்தது.
வெளியாகியுள்ள அறிக்கையில், எபோலா வைரஸ் அபாயத்தைக் குறைப்பதற்காக அமுல்படுத்தப்பட்ட நுழைவுக் கட்டுப்பாடுகள் காரணமாக, அந்தப் பயணி விமானத்தில் அனுமதித்திருக்கக் கூடாது என்றும்,
அந்தப் பயணியை ஏற்றிச் சென்ற விமானம் டெட்ராய்ட் வேய்ன் கவுண்டி விமான நிலையத்தில் தரையிறங்குவதைத் தடை செய்து, அதற்குப் பதிலாக கனடாவின் மாண்ட்ரியலுக்குத் திருப்பி விடப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், குறித்த பயணிக்கு எபோலா பாதிப்பு இருந்தனவா என்பது போன்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை. உள்ளூர் நேரப்படி 5.15 மணியளவில் கனடாவில் தரையிறங்கியுள்ளது.
அமெரிக்கக் கடவுச்சீட்டு
பின்னர், விமானம் டெட்ராய்ட் நோக்கித் தனது பயணத்தைத் தொடர்வதற்கு முன்னதாகவே, அந்தப் பயணி விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கோ நாட்டவரான அந்தப் பயணியை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் பிரான்ஸ் விமான சேவை நிறுவனம் உறுதி செய்துள்ளது.

முன்னதாக அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, காங்கோ, தென் சூடான் மற்றும் உகாண்டாவிலிருந்து பயணிக்கும் அமெரிக்கக் கடவுச்சீட்டு அல்லாதோர் மீது 30 நாட்கள் பயணத் தடையை அறிவித்துள்ளது.
அந்த நாடுகளில் உள்ள விமான நிலையங்களிலிருந்து புறப்படும் அல்லது கடந்த 21 நாட்களுக்குள் அந்நாடுகளுக்குச் சென்று வந்த அனைத்துப் பயணிகளுக்கும் பரிசோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
கடந்த 2007ல் முதல் முறையாக அடையாளம் காணப்பட்ட இந்த எபோலா தொற்றானது, பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் மக்களின் உயிரைப் பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |