SIR பணியில் நடைபெறும் OTP மோசடி - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
SIR பணி என்ற பெயரில் நடைபெறும் OTP மோசடி குறித்து தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
SIR பணி
தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணியை(SIR) இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

நவம்பர் 4 ஆம் திகதி முதல் டிசம்பர் 4 ஆம் திகதி வரை வரை வாக்காளர்களின் இல்லங்களுக்குச் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் நடவடிக்கை நடைபெறும் பணியை தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இணையதளம் வாயிலாகவும், சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியலுக்கான கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) நிரப்பும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
OTP மோசடி
இதனை பயன்படுத்தி, சைபர் மோசடியாளர்கள் பலர் மோசடியில் ஈடுபடுவது குறித்து தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
SIR பணிக்காக தொடர்பு கொள்வதாக செல்போனில் அழைக்கும் வடிக்கையாளர்கள் உங்கள் செல்போனில் SIR.APK என்ற போலியான செயலியை நிறுவ வேண்டும் என வாட்சப் அல்லது SMS மூலம் லிங்க் அனுப்புகிறார்கள்.

அதனை நீங்கள் செல்போனில் நிறுவிய உடன் உங்களது மொபைல் போனை அவர்களால் கட்டுப்படுத்த முடியும். அதன் பின்னர் உங்கள் எண்ணிற்கு ஒரு OTP வரும் அதை கூறுங்கள்.
அதை நீங்கள் கூறிவிட்டால், உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணம் முழுவதையும் அவர்களால் எடுக்க முடியும்.
மோசடியில் சிக்காமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
SIR பெயரில் எந்த லிங்க் அல்லது APK செயலி அனுப்பப்பட்டாலும் அதனை கிளிக் செய்ய வேண்டாம்.
SIR க்கான படிவத்தை ஆன்லைன் மூலம் நிரப்புவது என்றால் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்(https://voters.eci.gov.in) மட்டுமே நிரப்ப முடியும்.
மேலும், SIR பணிக்காக ஒரு போதும் OTP கேட்கப்படாது என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
அவ்வாறு யாரேனும் OTP கேட்டால், அவர்களது என்னை குறித்து வைத்துக்கொண்டு அருகிலுள்ள காவல்நிலையத்திலோ அல்லது 1930 என்ற எண்ணிலோ புகார் அளிக்கலாம்.
உங்களுக்கு SIR தொடர்பான சந்தேகம் இருந்தால், உங்கள் BLO அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |