நடிகர் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உட்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் நடித்ததற்காக நடிகர் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உட்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஜீட் வின், பரிமேட்ச், லோட்டஸ் 365 உள்ளிட்ட சூதாட்ட செயலிகள் மூலம் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது.
அதன்படி, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அப்போது, குறிப்பிட்ட சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் மட்டும் பிரபலங்கள் நடித்திருப்பது தெரியவந்தது.
இதனால் மக்களும் நம்பி சூதாட்ட செயலிகளை பயன்படுத்தி வந்துள்ளனர். அதில் நபர் ஒருவர் 3 கோடி ரூபாய் வரை பணத்தை இழந்ததாக புகார் தெரிவித்திருந்தார்.
அதன்படி, திரை பிரபலங்களான நடிகர் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உட்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |