செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை மனு மீது நாளை உத்தரவு
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பாட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோரும் அமலாக்கத் துறை மனு மீதான தீர்ப்பும் நாளை வெளியாகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்பில் ஜாமீன் கேட்டும், காவலில் எடுக்க அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை நாளை தள்ளி வைத்தார் நீதிபதி அல்லி.
செந்தில் பாலாஜியிடம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது உங்களுக்கு தெரியுமா? என நீதிபதி அல்லி அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும் அமலாக்கத் துறையின் நகல் வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கும் செந்தில் பாலாஜி இல்லை என்று நீதிபதியிடம் வீடியோ கான்ப்ரசிங் மூலம் பதில் அளித்தார்.
பின்னர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து காணொலி வாயிலாக விளக்கம் அளித்தார்.
அமலாக்கத்துறை மனுவை செந்தில் பாலாஜியிடம் அளித்து கையொப்பம் பெற நீதிமன்ற பணியாளருக்கு நீதிபதி அறிவுறுத்தல்.
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை வேண்டுகோள் விடுத்தது.
மேலும் விசாரணைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுப்பதாக அமலாக்கத்துறையினர் தரப்பு வாதிட்டனர்.
புலன் விசாரணை அதிகாரி சுதந்திரமாக விசாரித்து உண்மையை கண்டறிய காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை.
இதனிடையே செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க கூடாது என வாதிட்டார்.
மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்துக்கு வந்த அடுத்த நாள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
விசாரணை அமைப்புகளை ஏவல் அமைப்பாக மத்திய அரசு பயன்படுத்துகிறது என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம்.
செந்தில் பாலாஜி உடல் நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் இளங்கோரி கோரிக்கை விடுத்தார்.
செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்தார் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ.
அமலாக்கத்துறை துணை இயக்குநரும் மனுதாரருமான கங்காதரராவிடம் விசாரணை நடைபெற்றது.
தொடர்ந்து அமலாக்கத்துறையினர் தரப்பில் சட்ட விரோதமாக பணபரிமாற்றம் தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது.
தற்போதைய நிலையில் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க வேண்டியது அவசியம் என்பதால் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
பின்னர் நீதிபதி அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினரின் காவலில் செல்ல விருப்பம் உள்ளதா என கேள்வி எழுப்பினார். அதற்கு செந்தில் பாலாஜி விருப்பம் இல்லை என தெரிவித்தார்.
இந்த நிலையில் அமலாக்கத்துறை காவலில் எடுக்க கோரிய மனு மற்றும் இடைக்கால ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனு மீதான் தீர்ப்பு நாளை தள்ளி வைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.