மதுரை எழுச்சி மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி மீது தூவப்பட்ட 1000 கிலோ ரோஜாப்பூக்கள்!
மதுரையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதிமுக எழுச்சி மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக வருகைதந்த எடப்பாடி பழனிசாமியை தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
மாநாட்டில் அவர் கொடியேற்றும்பொழுது பழனிசாமி மீது சுமார் 1000 கிலோ ரோஜாக்கள் தூவப்பட்டது.
மதுரை வலையங்குளத்தில் அதிமுகவின் பொன்விழா வீர வரலாற்று எழுச்சி மாநாடு இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இம்மாநாட்டு திடலுக்கு எடப்பாடி பழனிசாமியை தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அப்போது மாநாட்டின் நுழைவு பகுதியில் இருந்த 51 அடி உயர கொடிக்கம்பத்தில் 8 அடி நீளம், 16 அடி அகலம் கொண்ட அதிமுக கொடியினை எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியை ஏற்றிவைக்கும்பொழுது ஹெலிகாப்டர் மூலம் அவர் மீது சுமார் 1000 கிலோ ரோஜா மலர்கள் தூவப்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கு சமாதான புறாக்களை பறக்கவிட்டார் எடப்பாடி.
கழக கொடியினை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் #எடப்பாடியார் அவர்கள்.#AIADMK_எழுச்சிமாநாடு #கழக_வீரவரலாற்றின்_பொன்விழா_எழுச்சி_மாநாடு #மதுரையில்_எழுச்சி_மாநாடு #ADMK #AIADMKConference #MaduraiADMKConference pic.twitter.com/8nxAoF5Tx5
— அஇஅதிமுக (@ADMKofficial) August 20, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |