சீமான், விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி: சூடுபிடிக்கும் அரசியல் களம்
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க சீமான், விஜய் ஆகியோருக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த சூழலில் தங்களுடன் கூட்டணி அமைக்க, தவெக தலைவர் விஜய் மற்றும் நாம் தமிழர் சீமான் ஆகியோருக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
கூட்டணிக்கு வரலாம்
அவர் நாளிதழுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், "2026யில் தமிழக மக்கள் ஒற்றைக் கட்சி ஆட்சியை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். திமுகவை தோற்கடிக்க அனைத்து ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளும் அதிமுகவுடன் கைகோர்க்க வேண்டும்.
ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என்ற கருத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பொருந்தும். இதுவரை தவெகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மக்களின் துன்பங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துகொள்ளவில்லை" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இரு கட்சிகளின் கூட்டணியை உடைக்கும் முயற்சிகள் பலனளிக்காது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |