Rafale, F-16, MiG-29 போதாமல் சீனாவின் போர் J-10C விமானத்தையும் வாங்கும் நாடு!
உலகிலேயே நான்கு நாடுகளின் போர்விமானங்களையும் ஒரே நாடு இயக்கவுள்ளது.
உலகத்தில் முதன்முறையாக, ஃப்ரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிலிருந்து விமானங்களை ஒரே விமானப்படையில் இயக்கவுள்ள நாடாக எகிப்து உருவாகலாம் என்ற கோரிக்கைகள் பல உறுதி பெறுகின்றன.
சமீபத்தில் சீனாவின் J-10C எனப்படும் 4.5 Gen போர் விமானங்களை எகிப்து வாங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
J-10C வாங்க எகிப்து திட்டம்?
2024-இல் நடைபெற்ற Egyptian International Air Show-இல் J-10C விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது.
அதையடுத்து, 2025-இல் Eagles of Civilization கூட்டுப் பயிற்சியில் எகிப்திய விமானி ஒருவர் இந்த சீன விமானத்தை ஓட்டிய வீடியோ வெளியாகியது. இது ஏற்கனவே சீனாவுடனான ஒப்பந்தம் நடந்துவிட்டதா? என்ற கேள்விகளை எழுப்பியது.
FA-50 மீதும் ஆர்வம்
அதே நேரத்தில், தென் கொரியாவின் FA-50 எனப்படும் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட stealth தொழில்நுட்பம் கொண்ட யுத்தவிமானம் குறித்தும் எகிப்து ஆர்வம் காட்டியுள்ளது. கடந்த மாதம் எகிப்து அதிகாரிகள் தென் கொரிய அதிகாரிகளுடன் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.
தகவல்கள் உண்மையாகி, J-10C வாங்கப்பட்டால், எகிப்து உலகில் ஒரே நேரத்தில் Rafale (பிரான்ஸ்), F-16 (அமெரிக்கா), MiG-29 (ரஷ்யா), J-10C (சீனா) ஆகியவைகளை இயக்கும் முதல் நாடாக உருவாகும். பாகிஸ்தானுக்குப் பிறகு, J-10C-ஐ இயங்கும் இரண்டாவது நாடாகவும் எகிப்து இருக்கும்.
எகிப்தின் விமானப் படையில் தற்போது மட்டும் 200-க்கும் மேற்பட்ட F-16 விமானங்கள் உள்ளன, இது உலகளவில் நான்காவது பாரிய F-16 படை எனக் கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Egypt J-10C fighter jet deal, Egypt air force Rafale F-16 MiG-29, J-10C, FA-50, Chinese fighter jets Egypt, Egypt military aircraft fleet 2025, Egypt-China defense ties, Egypt airshow J-10C, Rafale and J-10C in one air force, 4.5 gen fighter jets in Egypt, Eagles of Civilization air exercise