உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் திறப்பு - மரணத்தை ஏற்படுத்தும் சாபம் குறித்து எச்சரித்த மக்கள்
உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் எகிப்தில் திறக்கப்பட்டுள்ளது.
கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம்
உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமான "தி கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம்" நேற்று எகிப்தில் திறக்கப்பட்டது.

இதன் திறப்பு விழாவில், எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி மற்றும் பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

1992 ஆம் ஆண்டே இந்த அருங்காட்சியகம் கட்டுவதற்கான இடம் ஒதுக்கி எகிப்து அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் பிறகு, 2002 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு, 2005 ஆம் ஆண்டில் கட்டுமான பணிகள் தொடங்கியது.

நிதிநெருக்கடி, அரசியல் குழப்பங்கள், கொரோனா தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த கட்டுமான பணிகள் ஒருவழியாக முடிவிற்கு வந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றுள்ளது.
50 ஹெக்டேர் பரப்பளவில் 2,58,000 சதுர அடியில் 3 பிரமிடுகளையும் உள்ளடக்கிய இந்த அருங்காட்சியகத்தில், 5,500க்கும் அதிகமான பழங்கால கலைநயப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
துட்டன்காமூனின் கல்லறை
இந்த அருங்காட்சியகத்தில் எகிப்தின் சிறு வயது மன்னர் துட்டன்காமூனின் கல்லறையும் அடங்கியுள்ளது.

தனது 9 வயதில் ஆட்சிக்கு வந்த துட்டன்காமூன், கிமு 1332–1323 வரை எகிப்தை ஆட்சி செய்தார். அவர் தனது 18 - 19 வயதில் உயிரிழந்துள்ளார்.
பாறைகள் மற்றும் குப்பைகளால் சுமார் 3000 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த கல்லறையை ஹோவர்ட் கார்ட்டர்(howard carter) என்ற பிரித்தானிய அகழ்வாராய்ச்சியாளர் கண்டறிந்து, நவம்பர் 26, 1922 அன்று அதன் பூட்டை உடைத்தார்.

இந்த கல்லறையை கண்டறிய பல மில்லியன் பவுண்ட்கள் நிதியுதவியளித்த பிரித்தானிய பிரபு கார்னார்வோன் முதல் நபராக இந்த கல்லறைக்குள் நுழைந்தார்.
கல்லறைக்கு வெளியே கல்வெட்டுகள் எதுவும் இல்லாமல் இருந்தாலும், மன்னரின் தூக்கத்தை கலைக்கும் எவருக்கும் மரணம் வரும் என உள்ளூர்வாசிகள் எச்சரித்தனர். அங்கே தங்க சோபா, சிம்மாசனங்கள், 2 சிலைகளில் சீல் வைக்கப்பட்ட உள் அறைகள் ஆகியவை இருந்துள்ளன.
சாபத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு?
கல்லறை திறக்கப்பட 5 மாதங்களில் நிமோனியவால் கார்னார்வோன் உயிரிழந்தார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் அன்று இரவு திடீரென மின்வெட்டு ஏற்பட்டது.

அதே நேரத்தில் பிரித்தானியாவில் இருந்த அவரது வளர்ப்பு நாயும் 3 முறை குரைத்துவிட்டு உயிரிழந்துள்ளது.
மேலும், கல்லறையின் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஹக் ஈவ்லின் வைட் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். "நான் ஒரு சாபத்தின் கீழ் இருக்கிறேன், நான் இறக்க வேண்டும்" இரத்தத்தின் மூலம் சுவரில் எழுதியுள்ளார்.
மம்மியின் எக்ஸ்ரே எடுத்த ஆர்க்கிபால்ட் டக்ளஸ் ரீட்(Archibald Douglas Reid), மர்ம நோயால் இறந்தார்.
ஹோவர்ட் கார்ட்டரின் குழுவில் இருந்த ஆர்தர் மச்செந்த்(Arthur Machenth) என்ற அகழ்வாராய்ச்சியாளர், கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
கல்லறையை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த சர் லீ புரூஸ்(Sir Lee Bruce) என்பவரும் மர்மமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார்.
இவர்களின் உயிரிழப்பிறகு கல்லறையை திறந்ததால் ஏற்பட்ட மன்னரின் சாபமே என பலரும் கருதுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |