நான்கு மாத குழந்தை உட்பட 8 பேர்... உணவகத்திற்குள் காரை மோதிய சுற்றுலாப் பயணி
ஸ்பெயின் நாட்டின் Fuerteventura தீவில் பரபரப்பான உணவகம் ஒன்றில் சுற்றுலாப் பயணி ஒருவர் தமது வாகனத்தை மோதிய சம்பவத்தில் பச்சிளம் குழந்தை உட்பட 8 பேர் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாகன சாரதி பிரித்தானியர்
சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் Corralejo பகுதியிலேயே குறித்த விபத்து நடந்துள்ளது. வெளியான உறுதிப்படுத்தப்படாத தகவலில், அந்த வாகன சாரதி பிரித்தானிய சுற்றுலாப் பயணி என கூறப்படுகிறது.
@facebook
இதனிடையே, சம்பவத்தின் போது சாரதிக்கு மாரடைப்பு அல்லது வேறு மருத்துவ அவசரம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். உள்ளூர் தகவலின்படி, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டவர்களில் அந்த சாரதியும் ஒருவர் என்றே தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் ஐவர் படுகாயங்களுடன் தப்பியுள்ளனர். சம்பவத்தின் போது அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது போல் அதிவேகத்தில் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
பலத்த காயமடைந்தவர்களில் நான்கு மாத பெண் குழந்தை ஹெலிகாப்டர் மூலம் கிரான் கனாரியாவில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அதே மருத்துவமனைக்கு 18 வயது பெண்ணும் மாற்றப்பட்டுள்ளார்.
5 வயது சிறுமி ஒருவர்
49 வயது பெண் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 வயது சிறுமி ஒருவர் மோசமான நிலையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
@onda
தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்களும் அவசர மருத்துவ உதவிக் குழுவினருடன் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். நகர மேயர் தெரிவிக்கையில், விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும்
இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளும் ஆதரவும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |