பள்ளியில் நடந்த பயங்கரம்: செர்பியாவில் எட்டு மாணவர்களும் பாதுகாவலரும் பலி
செர்பியா நாட்டின் தலைநகரான பெல்கிரேடில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில், மாணவன் ஒருவன் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
எட்டு சிறுவர்களும் பாதுகாவலரும் பலி
அந்த 14 வயது மாணவன், வகுப்பில் வரலாற்றுப் பாடம் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென துப்பாக்கியை எடுத்து, தனது ஆசிரியர் மற்றும் சக மாணவர்களை சரமாரியாக சுட்டிருக்கிறான். இந்த சம்பவத்தில் எட்டு மாணவர்கள் உயிரிழந்துவிட்டார்கள்.
அத்துடன், அந்த பள்ளியின் பாதுகாவலர் ஒருவரையும் அவன் சுட்டுக்கொன்றுள்ளான்.
Sky News
படுகாயமடைந்த அந்த வரலாற்று ஆசிரியரும், மாணவர்கள் சிலரும் வெவ்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
யார் அந்த மாணவன்?
பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த மாணவனைக் கைது செய்துள்ளார்கள். அவனது முகத்தை மூடி, கைவிலங்கிட்டு பொலிசார் அழைத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Sky News
KK என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ள அந்த மாணவன் சமீபத்தில்தான் அந்த பள்ளியில் சேர்ந்துள்ளான். அவனுடைய வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி, விளையாட்டு வகுப்பிற்கு சென்றதால் உயிர் தப்பியிருக்கிறாள். அவள், அந்த மாணவன் அமைதியான மாணவன், நன்றாகவும் படிப்பான், ஆனால், எல்லோரிடமும் நன்றாகப் பழகுவதில்லை. இருந்தாலும், இப்படி அவன் செய்வான் என தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறாள்.
Sky News
பொலிசார் அந்த மாணவனிடம் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், செர்பியாவில் இதுபோன்ற துப்பாக்கிச்சூடுகள் அபூர்வம் என்பதால், மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.