ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற தமிழ் வீராங்கனை
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றுள்ளார்.
இளவேனில் வாலறிவன்(Elavenil Valarivan), கசகிஸ்தானில் நடைபெற்ற 16-வது Asian Shooting Championship போட்டியில், பெண்களுக்கான 10 மீட்டர் Air Rifle பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 வயதான இவர், இறுதிப்போட்டியில் 253.6 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தார்.
இது அவர் வென்ற இரண்டாவது ஆசிய தங்கம் ஆகும். முதல் தங்கம் 2019-ல் தைவானில் வென்றார்.
இப்போட்டியில், சீனாவின் சின்லூ பெங் 253 புள்ளிகளுடன் வெள்ளியும், கொரியாவின் யூன்ஜி கோன் 231.2 புள்ளிகளுடன் வெண்கல புதைக்கவும் வென்றனர்.
இந்தியாவின் மற்றோரு வீராங்கனை மெஹுலி கோஷ் 208.9 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை அடைந்தார்.
தற்போது, தரவரிசையில் இளவேனில் 11-ஆம் இடத்தில் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர் உலகின் முதல் 10 வீராங்கனைகளில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Elavenil Valarivan, Asian Shooting Championship 2025, 10m Air Rifle Gold, India Shooting Medal, Shymkent Kazakhstan Shooting, Women’s Rifle Shooting, Sports News in tamil, ISSF World Championships, Mehuli Ghosh Shooting, Team India Shooting Medal Tally