நிலச்சரிவில் புதைவதற்கு முன் எப்படி இருந்தது? 26 மணிநேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட தம்பதி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்
ஜப்பான் நிலச்சரிவு ஏற்பட்ட தளத்தில் கடும் மழையில் போராடி மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரர்கள், தற்போது வரை முதியோர் தம்பதி உட்பட 23 பேரை மீட்டுள்ளனர்.
சனிக்கிழமை ஜப்பானின் Atami-யில் நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் புதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது வரை இந்த நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் மாயமாகியுள்ளனர்.
கடும் மழையையும் பொருட்படுத்தாமல் நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் பொலிஸ், தீயணைப்பு வீரர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் என 1,500 மீட்பு பயணியினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை முதியோர் தம்பதிகள் உட்பட 23 பேர் நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என நகர மேயர் தகவல் தெரிவித்துள்ளார்.
சுமார் 26 மணிநேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டவர்களில் 75 வயதான Yoshie Yuhara மற்றும் அவரது கணவர் Eiji அடங்குவர்.
நிலச்சரிவு ஏற்பட்ட போது கனரக இயந்திரங்கள் போன்ற ஒரு பயங்கர சத்தம் கேட்டதாகவும், கீழ் தளம் வெள்ளத்தில் மூழ்குவதற்கு சற்று முன்பு தங்கள் இருவரும் மூன்றடுக்கு கட்டிடத்தின் உச்சிக்கு தப்பிச்சென்றதாக தம்பதி கூறினர்.