இஸ்ரேலை விட வயது மூத்தவள் நான்... கவனத்தை ஈர்த்த பாலஸ்தீன பெண்மணி படுகொலை
வயது மூத்த பாலஸ்தீன பெண்மணி, சமூக ஊடகத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்த காணொளியில் இடம்பெற்றவர், இஸ்ரேல் சிறப்புப்படை வீரரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அரேபிய மொழியில் பேரழிவு
பேரழிவு என பொருள்படும் Nakba ஏற்படுவதற்கும் 4 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1944ல் பிறந்தவர் Hadia Nasr. 1948ல் நடந்த போரையே அரேபிய மொழியில் பேரழிவு என பொருள்படும் Nakba என குறிப்பிடுகின்றனர்.
Credit: Al Arabiya
தொடர்புடைய போருக்கு பின்னர் தான் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது. அத்துடன் பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களை வலுக்கட்டாயமாக இஸ்ரேல் நிர்வாகம் வெளியேற்றி, புதிய நாட்டை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் வான் தாக்குதலில் காயம்பட்டிருந்த Hadia Nasr என்பவரை சந்திக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார் பாலஸ்தீன ஊடகவியலாளர் Saleh al-Jaafrawi. அவர் பதிவு செய்த காணொளியே சமூக ஊடகங்களில் பலரது கவனத்தை ஈர்த்தது.
@reuters
Hadia Nasr இஸ்ரேல் உருவாகும் முன்னரே பிறந்தவர் என்பதை ஆவணங்கள் ஊடாக உறுதி செய்த ஊடகவியலாளர் Saleh al-Jaafrawi, ஸ்தம்பித்துப் போனதுடன், அவரது அனுபவங்களையும் கேட்டறிந்துள்ளார்.
அதிகாரத்தை பயன்படுத்தி
அந்த காணொளியில் தான், தாம் இஸ்ரேல் நாட்டை விடவும் வயது மூத்தவள் என அவர் குறிப்பிடுகிறார். ஆனால் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறிய Hadia Nasr தமது குடியிருப்புக்கே வலுக்கட்டாயமாக திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் தான் அவரது வீட்டு வாசலில், தொலை தூரத்தில் இருந்து இஸ்ரேல் ராணுவ வீரர் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
@getty
இதனிடையே, காஸா பகுதியில் போர் நிறுத்தம் வேண்டும் என்ற ஐ.நா மன்றத்தின் கோரிக்கையை அமெரிக்கா தனது அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்துள்ளதை அடுத்து, இஸ்ரேல் கொடூர தாக்குதலை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 17,000 கடந்துள்ளதாக காஸா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தமுள்ள 2.3 மில்லியன் மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர்கள் காஸாவின் பல பகுதிகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |