என்னை கட்டி வைத்து கொடுமை படுத்தினாங்க! சீன இராணுவத்திடம் சிக்கிய இந்திய இளைஞர் பகீர் தகவல்
சீன இராணுவத்திடம் சிக்கிய இந்திய இளைஞர் பிரபல ஊடகம் ஒன்றில் சில அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் வசித்து வருபவர் Miram Taron(17). இந்த சிறுவன் கடந்த ஜனவரி மாதம் 18ஆம் திகதி வேட்டைக்காக சென்ற போது சீன ராணுவத்தால் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
பின்னர் இந்திய ராணுவத்தின் கோரிக்கையின் அடிப்படையில் சிறுவனை விடுவிக்க சீன ராணுவம் ஒப்பு கொண்டது. ஆனால் வானிலை மோசமாக இருப்பதாக காரணம் காட்டி 7 நாட்களுக்கு பிறகே சிறுவனை விடுவித்தனர்.
அதன் பிறகு இந்திய இராணுவம் மூலம் குடும்பத்தாரிடம் அந்த சிறுவன் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கிராம மக்கள் அச்சிறுவனுக்கு கோலாகலமாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த Miram Taron, தன்னை சீன ராணுவத்தினர் கட்டி வைத்து எலக்ட்ரிக் ஷாக் கொடுத்ததாக கூறியுள்ளார்.
அதாவது முதல் நாள் அவர்கள் என்னை காட்டிற்குள் அழைத்து சென்று கைகளைக் கட்டி மின்சாரத்தைப் பாய்ச்சி பயங்கர கொடுமை செய்தனர். ஆனால் இரண்டாவது நாளிலிருந்து அவர்கள் என்னை எதுவும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.