யானைக்கு கால் மசாஜ் செய்யும் பாகன்: இணையத்தில் பரவும் அழகான வீடியோ
யானை ஒன்று தன்னுடைய பாகனிடம் பாத மசாஜ் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
யானைக்கு பாத மசாஜ்
தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள யானை தன்னுடைய பாகனிடம் பாத மசாஜ்(Leg Massage) செய்து கொள்ளும் அழகான காட்சி இணையத்தில் வெளியாகி பலரது மனதையும் நெகிழ வைத்துள்ளது.
மங்களம் என அழைக்கப்படும் அந்த யானை, நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம் பூசி, கழுத்தில் சிறிய மணிகள் அடங்கிய மாலை அணிந்து அமைதியுடன் காட்சியளிக்கும் அந்த வீடியோ மிகவும் அழகாக உள்ளது.
@Lifewshroots என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், அந்த பாகன் மங்களம் யானையின் கால்களை கோதி மென்மையாக பிடித்து அழுத்தி தடவி விடுகிறார். அந்த யானையும் மசாஜ் செய்யும் போது தனது கால்களை தூக்கி கொடுத்து, பின் நீட்டி கொடுத்து பாகனுக்கு ஒத்துழைக்கிறது.
சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவிற்கு, “பெரிய உடல் ஆனால் குழந்தை மனம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |