மனிதர்களை போல் நடந்துகொண்ட யானைகள்! குட்டிக்கு ஆபத்து வந்ததும் தாய் யானை செய்த செயல்
தாய் யானையுடன் இருந்த யானைக்குட்டி ஒன்று ஆழமான குளத்தில் தவறி விழுந்தது.
தாய் யானையுடன் மற்ற யானைகள் சேர்ந்து மனிதர்களைப் போல் செயற்பட்டு குட்டியை காப்பாறின.
தென்கொரியாவில் வனவிலங்கு பூங்கா ஒன்றில் குட்டியானை குளத்துக்குள் தவறி விழுந்தும், மற்ற பெரிய யானைகள் மனிதர்களை போலவே செயல்பட்டு குட்டியை சாதுரியமாக காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஒரு குழந்தை என்பது அதன் பெற்றோரின் மிகப்பெரிய பொக்கிஷம், அது மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி. குழந்தைக்கு ஆபத்து ஏற்பட்டால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதேபோல், ஆழமான குளத்தில் மூழ்கிய தனது குட்டியை யானைகள் காப்பாற்றியுள்ளன.
சனிக்கிழமையன்று ட்விட்டரில் கேப்ரியல் கார்னோ என்ற பயனரால் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு தாயும் ஒரு குட்டி யானையும் தண்ணீர் குடிக்க குளத்திற்கு சென்றன. அப்போது திடீரென குட்டி யானை தண்ணீரில் மூழ்கியது.
இது தென்கொரிய தலைநகரமான சியோலில் உள்ள வனவிலங்கு பூங்காவில் எடுக்கப்பட்ட வீடியோவாகும்.
தாய்க்கும் அதன் குட்டிக்கும் உதவ மற்றொரு யானை வருகிறது. குட்டி யானை தனது தும்பிக்கையை தண்ணீருக்கு மேல் வைத்திருக்க முயலும் போது இரண்டு பெய்ய யானைகளும் இணைந்து அதைக் காப்பாற்றுகின்றன.
வேலிக்கு பின்னால், மூன்றாவது யானை ஆவேசமாகவும் விரக்தியாகவும் நடந்து செல்வதைக் காணலாம், அதுவும் தண்ணீரில் விழுந்த குட்டியானையை மீட்பதற்கு உதவ மற்ற இரண்டு யானைகளை அடைய முயன்றுள்ளது..
In the Seoul zoo, two elephants rescued baby elephant drowned in the pool pic.twitter.com/zLbtm84EDV
— Gabriele Corno (@Gabriele_Corno) August 13, 2022
இரண்டு யானைகளும் தண்ணீருக்குள் நுழைந்து, குட்டியை ஆழமற்ற பகுதியின் திசையில் நகர்த்தி அழகாக மேலே அழைத்தவந்தன. அவற்றின் விரைவான சிந்தனையால் குட்டி யானையின் உயிர் காப்பாற்றப்பட்டது. யானைகள் எவ்வளவு இரக்கமுள்ளவை, பாசமானவை எம்பதும், எவ்வளவு அறிவுள்ளவை என்பதையம் இந்த வீடியோ காட்டுகிறது.
பகிரப்பட்டதிலிருந்து, இந்த வீடியோ கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 81,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான பயனர்கள் இந்த விடியோவை ரீ-ட்வீட் செய்துள்ளனர் மற்றும் பதிவின் கருத்துப் பிரிவில் ஏராளமான அழகான கருத்துகள் சேர்ந்தன.